பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம்


பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம்
x
தினத்தந்தி 1 Dec 2019 8:15 PM GMT (Updated: 1 Dec 2019 7:49 PM GMT)

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களில் போபாலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

பாதுகாப்பற்ற உணர்வு தொடர்பாக, பெண்களிடையே ‘சேப்டிபின்‘ என்ற சமூக நிறுவனமும், ஒரு தொண்டு நிறுவனமும் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில், மத்தியபிரதேச மாநிலம் போபால், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆகிய நகரங்களை பாதுகாப்பற்ற நகரங்களாக உணர்வதாக 90 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

அந்த நகரங்கள், ஒதுக்குப்புறங்களும், பாதுகாப்பற்ற பகுதிகளும் நிறைந்தவை. காலியான பஸ், ரெயில்கள், போதைப்பொருள், மது விற்பனை ஆகியவற்றை பாதுகாப்பற்றதாக கருதுவதாக பெண்கள் தெரிவித்தனர். மாணவிகள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகியோர் பாலியல் தொல்லைக்கு அதிகம் இலக்காவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Next Story