தேசிய செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது + "||" + Three held for selling liquor with fake labels

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை; 3 பேர் கைது
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசாபர்நகர்,

பிரபல மதுபான நிறுவனத்தின் போலி லேபிளை ஒட்டி, பல மாநிலங்களில் போலி மதுவை விற்று வந்த கும்பலில் 3 பேர், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கைது செய்யப்பட்டனர். டெல்லியை சேர்ந்த சாமன்பால், சோனிபட்டை சேர்ந்த சவுரப், ராஜ்பீர் ஆகியோர் பிடிபட்டவர்கள் ஆவர். அந்த கும்பலிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சம் மது பாட்டில்கள், பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


இந்த கும்பல் உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், மராட்டியம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்தது. இவர்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.