தேசிய செய்திகள்

நடிகை டிம்பிள் கபாடியாவின் தாயார் மரணம் + "||" + Death of mother of actress Dimple Kapadia

நடிகை டிம்பிள் கபாடியாவின் தாயார் மரணம்

நடிகை டிம்பிள் கபாடியாவின் தாயார் மரணம்
நடிகை டிம்பிள் கபாடியாவின் தாயார் மரணமடைந்தார்.
மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவின் தாயார் பேட்டி கபாடியா நேற்றுமுன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. மூச்சுத்திணறல் காரணமாக, 2 வாரங்களுக்கு முன்பு, மும்பையில் உள்ள இந்துஜா ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


2 மாதங்களுக்கு முன்பு, பேட்டி கபாடியாவின் 80-வது பிறந்தநாளை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட படங்களை பேட்டி கபாடியாவின் பேத்தி நடிகை டுவிங்கிள் கன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.