தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுத குவியல் மீட்பு + "||" + In Kashmir Terrorist hideout busted in Baramulla

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுத குவியல் மீட்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுத குவியல் மீட்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுத குவியல் ராணுவத்தால் மீட்கப்பட்டது.
பாரமுல்லா,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட ரபியாபாத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள் படை, மாநில போலீஸ் அதிரடிப்படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எப்.) படையினர் இணைந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது அங்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த பதுங்குமிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என மிகப்பெரும் ஆயுத குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். எனினும் இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் இருந்து மிகப்பெரும் ஆயுத குவியல் கைப்பற்றப்பட்ட சம்பவம் காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கா‌‌ஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர் உள்பட 4 பயங்கரவாதி களை பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.
2. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.