தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் + "||" + First Review Petition Filed In Supreme Court Against Its Ayodhya Verdict

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்
அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கே வழங்க உத்தரவிட்டது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால், சன்னி வக்பு வாரியம், சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் அமைப்பு ஒன்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஜமியத் உலமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது அஷாத் ரஷிதி, இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர், அயோத்தி வழக்கின் பிரதான மனுதாரரான எம்.சித்திக்கின் சட்டப்பூர்வ வாரிசு ஆவார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஒட்டுமொத்த தீர்ப்பையும் எதிர்க்கவில்லை. ஆவண ஆதாரங்களை புறக்கணித்து இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்து தரப்பின் சட்டவிரோத காரியங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

முஸ்லிம் தரப்பு கேட்காத நிலையிலேயே 5 ஏக்கர் நிலம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகள் அப்பட்டமாக காணப்படுகின்றன. ஆகவே, தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, விசாரணைக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை. 9-ந் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்ற மத்திய மந்திரி: சர்ச்சை ஏற்பட்டதால் வாபஸ் பெற்றார்
சுரங்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிடாத தீர்ப்பை வரவேற்பதாக கூறிய மத்திய மந்திரி, சர்ச்சை ஏற்பட்டதால் அந்த கருத்தை வாபஸ் பெற்றார்.
2. ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
ஜல்லிக்கட்டு குழு அமைக்கும் உத்தரவுக்கு எதிராக ஏ.கே.கண்ணன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
3. சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு
சபரிமலை வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
4. காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5. ஓட்டு எண்ணிக்கை வீடியோ நகலை தாக்கல் செய்யக்கோரிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு
ஓட்டு எண்ணிக்கை வீடியோ நகலை தாக்கல் செய்யக்கோரிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கக்கேட்டு மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.