பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்


பிரியங்கா காந்தி இல்ல  பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 6:04 PM IST (Updated: 2 Dec 2019 6:04 PM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி, 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் இல்லம்  டெல்லியில் உள்ள  லோதி எஸ்டேட் பகுதியில் உள்ளது. டெல்லியில் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த இடத்தில், முக்கிய பிரமுகர்கள் பலர் வசிப்பதால், எப்போதும்  பாதுகாப்பு கெடுபிடி அதிகமாக இருக்கும்.  இந்த நிலையில், பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த சில நபர்கள், உரிய முன் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த பாதுகாப்பு குறைபாடு கடந்த 25-ம்தேதி நடந்திருப்பதை பிரியங்கா காந்தியின் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது. மிக முக்கிய வி.ஐ.பி.க்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதை காங்கிரசார்  கண்டித்து  உள்ளனர். சமீபத்தில் தான் பிரியங்கா காந்திக்கு  வழங்கப்பட்டிருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. 

Next Story