தேசிய செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகும் சாலை விபத்து மரணங்கள் குறையவில்லை - மாநிலங்களவையில் நிதின் கட்காரி தகவல் + "||" + Saddened That No Major Change In Number Of Road Accidents: Nitin Gadkari

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகும் சாலை விபத்து மரணங்கள் குறையவில்லை - மாநிலங்களவையில் நிதின் கட்காரி தகவல்

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகும் சாலை விபத்து மரணங்கள் குறையவில்லை - மாநிலங்களவையில் நிதின் கட்காரி தகவல்
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகும் சாலை விபத்து மரணங்கள் குறையவில்லை என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களும் குறையவில்லை. விபத்து அபாய பகுதிகள்தான், பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். இந்த பகுதிகளை சீர்செய்வதற்காக, ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 திட்டங்களை உலக வங்கி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம்.


தமிழ்நாட்டில் மட்டும் 29 சதவீத விபத்துகள் குறைந்து விட்டன. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில் தமிழநாட்டை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு மற்ற மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.