தேசிய செய்திகள்

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு + "||" + Sub-lieutenant Shivangi becomes first woman pilot for Indian Navy

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு

இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு
இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
கொச்சி,

இந்திய கடற்படையில் பயிற்சியை முடித்து விமானிகளாக 2 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானிகளாக பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


மேலும், ‘இந்த 2 பெண்களும் விமானிகளாக இணைந்துள்ளது, இந்திய கடற்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது’ என்று சச்சின் தெண்டுல்கரும் தனது டுவிட்டரில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஷிவாங்கி நேற்று கேரள மாநிலம் கொச்சி கடற்படையில் தனது பணியை தொடங்கினார். இதன் மூலம் இந்திய கடற்படையில் இணைந்த முதல் பெண் விமானி என்ற பெயரையும் அவர் தட்டிச்சென்றார்.

ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர். நாளை (புதன்கிழமை) இந்தியாவில் கடற்படை தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாக ஷிவாங்கி பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் தவித்தபோது இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகம்
இலங்கையில் தவித்தபோது, இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்று கப்பலில் சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகத்துடன் கூறினர்.