நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்


நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 9:15 PM GMT (Updated: 2 Dec 2019 8:25 PM GMT)

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் பொக்ரியால் சில கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

அனைத்து பள்ளிகளின் பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை மேம்படுத்த வழிகாட்டவும், உத்தரவு பிறப்பிக்கவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சில் தேசிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. கல்வி அரசியல்சாசனத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்தாலும், பெரும்பான்மையான பள்ளிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

எனவே தேசிய பாடத்திட்டத்தில் உள்ள சீரான பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் கொண்டுவர வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story