பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி


பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 3 Dec 2019 8:43 AM GMT (Updated: 3 Dec 2019 8:43 AM GMT)

பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில்,  நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்திய  ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) அறிக்கையில், ரெயில்வே  துறை 2017-18 ஆம் ஆண்டில் 98.44 சதவீத இயக்க விகிதத்தை பதிவு செய்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் மிக மோசமானது என சுட்டிக்காட்டி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,  பாரதீய ஜனதா விற்பனை செய்வதில் திறமையானது, ஆனால் எதையும் உருவாக்கும் திறமையானது கிடையாது என கூறி உள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

இந்திய ரெயில்வே துறை  நாட்டின் உயிர்நாடியாகும். இப்போது, பாஜக அரசு ரெயில்வே துறையை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு, மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே, ரெயில்வே துறையையும்  விற்பனை செய்யத் தொடங்கும். இந்த அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என கூறி உள்ளார்.

Next Story