காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்? மத்திய அரசு விளக்கம்


காஷ்மீரில் இணைய தள முடக்கம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:10 AM GMT (Updated: 3 Dec 2019 10:10 AM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும்  ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால், வதந்திகள் பரவி வன்முறை ஏற்படக்கூடாது என்பதால்,  ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதள சேவைகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டன. 

பின்னர் படிப்படியாக, கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. எனினும், , இணைய தள சேவைகள் தொடர்ந்து வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இணையதளம் தொடர்ந்து முடக்கப்பட்டு இருப்பது பற்றி பாராளுமன்றத்தில், எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி கிஷன் ரெட்டி கூறியதாவது:- 

இந்தியாவுக்கு எதிராக விஷம கருத்துக்களை பரப்பி இளைஞர்களை தூண்டும் வகையில்,  எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தானால், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதை தடுக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார். மேலும் ,  ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசிய சேவைகள் எந்த இடையூறும் இன்றி கிடைப்பதாகவும்  அவர் கூறினார். 

Next Story