எல்லையில் பாக். அத்துமீறல்: பொதுமக்களில் 2 பேர் பலி, 8 பேர் காயம்


எல்லையில் பாக். அத்துமீறல்: பொதுமக்களில் 2 பேர் பலி, 8 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Dec 2019 8:36 PM IST (Updated: 3 Dec 2019 8:36 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் 2 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம், மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், பொதுமக்களில் 2 பேர் பலியாகினர். 8 பேர் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.

Next Story