அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு


அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2019 5:38 PM GMT (Updated: 3 Dec 2019 5:38 PM GMT)

அரசியலுக்கு அறிவார்ந்த இளைஞர்கள் தேவை என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்த் பல்கலைக் கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில்  உரையாற்றிய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், “ நாட்டில் அரசியல் சீர்த்திருத்தங்களை செய்வதன் மூலம், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் 5 வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய இயலும். இந்திய நாடு பல வளங்களையும் தன்னிடம் வைத்துள்ள பூமியாகும். நம் நாட்டில் இல்லாத ஒன்று, சரியான அமைப்பு மற்றும் ஆளுமை ஆகும். அவற்றை சரிசெய்யவேண்டும். நல்ல மனிதர்கள், அரசியலில் நுழைந்தால், நம் நாட்டை உச்சத்திற்கு கொண்டுசெல்வதை யாராலும் தடுக்க இயலாது. இந்திய அரசியலில், இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். அதையே தங்கள் வேலையாக எடுத்துக்கொண்டு செய்யாமல், நாட்டிற்காக தியாகம் செய்யவும், கடுமையாக உழைக்கவும் விரும்பும் அறிவார்ந்த மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும்” என்று கூறினார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.

Next Story