ராஷ்டிரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு


ராஷ்டிரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 4 Dec 2019 4:00 AM IST (Updated: 4 Dec 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ராஷ்டிரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ், மாட்டுத்தீவன வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு லாலுபிரசாத் பெயரில் அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிரதாப் யாதவ் ஆகியோரால் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. கட்சித்தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் லாலுபிரசாத் யாதவ் போட்டியின்றி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story