தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டப்பட்டதாக விவசாயி புகார் + "||" + Onion crop stolen from farm in Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டப்பட்டதாக விவசாயி புகார்

மத்திய பிரதேசத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டப்பட்டதாக விவசாயி புகார்
மத்தியப் பிரதேசத்தில் 30,000 ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
போபால்,

மத்திய பிரதேச மாநிலம், மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள ரிச்சா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர தங்கர். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1.6 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். 

இந்நிலையில் தனது நிலத்தில் புகுந்து அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து திருடிச் சென்றதாக உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இந்த வருட விளைச்சலின் மூலம் தனது கடன்களை அடைக்க திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

மொத்தம் 6 குவிண்டால் அளவுள்ள வெங்காயம் திருடப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 30,000 ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புகார் விவரங்களை  மதிப்பிடுவதற்காக ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்களது மதிப்பீட்டிற்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தின் ஷிவ்புரி பகுதியில், லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெங்காயம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில், கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு - தந்தை, மகன் கைது
சேலத்தில் கள்ளச்சாவி போட்டு மளிகைக்கடையில் ரூ.1½ லட்சம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
2. எசனையில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
எசனை கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 15½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
தலைவாசல் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து, 16 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.