நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல்


நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2019 2:01 AM IST (Updated: 5 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டது.

புதுடெல்லி,

ஹாங்காங் நாட்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை திடீரென கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு அந்த கப்பலை கடத்தி சென்றனர். இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டு உள்ளது. இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் இருந்தனர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை. கப்பல் கடத்தப்பட்ட தகவலை அறிந்ததும், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களின் விவரங்களை அறியவும், அவர்களை மீட்கவும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story