ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா
ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இது காங்கிரசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா கிண்டல் செய்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் ‘ஜாமீனில் வெளியே இருப்போர் குழுவில்’ ப.சிதம்பரமும் கடைசியில் சேர்ந்து விட்டார். அவர் இணைந்துள்ள அந்த குழுவில் சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா, மோதிலால் வோரா, பூபிந்தர் ஹூடா, சசிதரூர் உள்ளிட்டோரும் ஏற்கனவே இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Tags :
Next Story