நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்


நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்
x
தினத்தந்தி 5 Dec 2019 3:13 AM IST (Updated: 5 Dec 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது, “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பலவீனமாகி விட்டார். அவர் இனிமேல் நிர்பலா சீதாராமன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த கருத்துக்கு சவுத்ரி நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க தொடங்கும்போது, சவுத்ரி குறுக்கிட்டார்.

அவர் பேசுகையில், “எனது கருத்து, நிதி மந்திரியை காயப்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு சகோதரி போன்றவர். என்னை அவருடைய சகோதரனாகவே கருதுகிறேன்” என்றார்.

அதற்கு நிர்மலா சீதாராமன் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தனது பதிலுரையின் இறுதியில், “நான் இன்னும் சப்லா (அதிகாரம் மிக்கவள்) தான்” என்று அவர் கூறினார்.

Next Story