தேசிய செய்திகள்

நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி; மும்பை நீதிமன்றம் அறிவிப்பு + "||" + Nirav Modi declared fugitive economic offender

நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி; மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி; மும்பை நீதிமன்றம் அறிவிப்பு
நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை,

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். 

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த  மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இதனிடையே ஐந்தாவது முறையாக ஜாமீன்  வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்தது. 

இந்தநிலையில், நிரவ் மோடியின் வங்கி பணமோசடி வழக்கு தொடர்பான  விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடனை செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார  குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம் - மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
ரூ.9½ கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளார். எனவே அந்த வரியை வசூலிக்க நிரவ் மோடியின் 3 சொத்துகளை மும்பை மாநகராட்சி அதிரடியாக முடக்கி உள்ளது.
2. ரூ.9½ கோடி வரி பாக்கிக்காக நிரவ் மோடியின் 3 சொத்துகள் முடக்கம்; மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
3. நிரவ் மோடி ஜாமீன் மனு 5-வது முறையாக நிராகரிப்பு
நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 5வது முறையாக இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.
4. நிரவ் மோடிக்கு எதிரான வங்கி கடன் மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகை; சி.பி.ஐ. தாக்கல்
நிரவ் மோடிக்கு எதிரான வங்கி கடன் மோசடி வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
5. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்
தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.