பெண்கள் தற்காப்புக்காக "பெப்பர் ஸ்பிரே" கொண்டு போக ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் அனுமதி


பெண்கள் தற்காப்புக்காக பெப்பர் ஸ்பிரே கொண்டு போக  ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் அனுமதி
x
தினத்தந்தி 5 Dec 2019 4:46 PM IST (Updated: 5 Dec 2019 4:46 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் தற்காப்புக்காக "பெப்பர் ஸ்பிரே" கொண்டு போக ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

ஐதராபாத்,

சமீபத்தில், தெலுங்கானா ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

இந்த கொடூர சம்பவத்தின் எதிரொலியாக பல மாநில அரசுகள் தனியாக வெளியே சென்று இரவில் வீடு திரும்பும் பெண்களின் பாதுகாப்பிற்கு, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பஞ்சாப் மாநில அரசு, இரவில் வீடு திரும்பும் பெண்களின் வசதிக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது.

அதை தொடர்பு கொண்டால் காவல்துறை வாகனத்திலேயே இலவசமாக வீடு திரும்ப பிக்கப் & ட்ராப்  வசதி அளிக்கப்படும் என கூறியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கடந்த செவ்வாய்க்கிழமை தனது பாதுகாப்புப் பணியாளர்களுக்கு, மெட்ரோவில் பயணம் செய்யும் போது பெண் பயணிகளை 'பெப்பர் ஸ்பிரே' கொண்டு செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை முன்மாதிரியாக கொண்டு, ஐதராபாத் மெட்ரோ ரெயில் நிர்வாகம், தனியாக வரும் பெண்கள் தற்காப்புக்காக 'பெப்பர் ஸ்பிரே' கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில்களில் துணை இன்றி தனியே செல்லும் பெண்கள் 'பெப்பர் ஸ்பிரே'வை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு, நிலையங்களில் உள்ள பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியுள்ளது.

அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் 360 டிகிரி சி.சி.டி.வி கண்காணிப்பு இருப்பதால் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பானது என்று ஐதராபாத் மெட்ரோ ரெயில் நிலைய நிர்வாக இயக்குனர் என்விஎஸ் ரெட்டி கூறியுள்ளார்.

Next Story