பெண் மந்திரிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல்: மக்களவையில் கடும் அமளி - நாள் முழுவதும் சபை ஒத்திவைப்பு
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டிய விவகாரத்தில் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டு, சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை போலீசார் என்கவுண்ட்டரில் கொன்ற விவகாரமும், உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண், குற்றவாளிகளால் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது நாடாளுமன்ற மக்களவையிலும் நேற்று எதிரொலித்தது.
கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சினையை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பி பேசினார்.
அப்போது அவர், “ஒரு புறம் ராமருக்கு கோவில் கட்டப்படுகிறது. இன்னொரு புறம் சீதை உயிரோடு எரிக்கப்படுகிறார். உத்தரபிரதேசத்தை உத்தம மாநிலமாக (சிறந்த மாநிலமாக) மாற்றுவது பற்றி பேசுகிறார்கள். ஆனால் அது அதர்ம மாநிலமாக ஆகி இருக்கிறது” என்று கூறினார்.
அப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி குறுக்கிட்டு பேசினார். அவர், “பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் துரதிர்ஷ்டவசமானவை. இவற்றை அரசியலாக்க கூடாது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே போன்ற சம்பவம், மேற்கு வங்காள மாநிலம், மால்டாவில் நடைபெற்றதை குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் பெண் மீது தீ வைப்பது கண்டனத்துக்கு உரியது. பெண்ணை கற்பழித்து கொல்வது மனிதாபிமானமற்ற செயல்” என்று கூறினார்.
அப்போது கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபனும், டீன் குரியகோசும் சட்டையின் கையை சுருட்டி விட்டவாறு சபையின் மையப்பகுதிக்கு வந்து, மந்திரி ஸ்மிரிதி இரானியை மிரட்டும் விதத்தில் கோஷம் போட்டனர்.
அதைத் கண்ட ஸ்மிரிதி இரானி, “ஒரு பெண் இங்கே நின்று பேசுவதை நீங்கள் விரும்பவில்லை. மேற்கு வங்காளத்திலும் சரி, உன்னாவிலும் சரி நடந்த சம்பவங்கள் மிக கொடியவை. ஆனால் அவற்றை அரசியல் ஆக்கக்கூடாது” என கூறினார்.
சபையில் தொடர்ந்து கடும் அமளி நிலவியதால், உணவு இடைவேளைக்காக சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் சபை மீண்டும் கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் இருந்து சபையை நடத்திய மீனாட்சி லேகி (பாரதீய ஜனதா), மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை அழைத்து, மந்திரி ஸ்மிரிதி இரானியை மிரட்டும் விதத்தில் நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதாபனையும், டீன் குரியகோசையும் சபைக்கு வந்து மன்னிப்பு கேட்குமாறு கூறுங்கள் என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷியும், இதை வலியுறுத்தினார். அத்துடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் செயல் விரும்பத்தகாதது; கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார்.
அதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “இந்த சம்பவம் நடந்தபோது சபையில் நான் இல்லை. நான் அதை விசாரித்து விட்டு பேசுகிறேன்” என்று கூறினார்.
ஆனால் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரும், பிற பாரதீய ஜனதா எம்.பி.க்களும், தேவைப்பட்டால் சபையை ஒத்தி வைத்துவிட்டுக்கூட தவறு செய்த காங்கிரஸ் எம்.பி.க்களை சபைக்கு வரவழைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு நேர் பின்னால் அமர்ந்து இருந்த பாரதீய ஜனதா பெண் எம்.பி. சங்கீதா தியோ, பெண் மந்திரியை அவர்கள் மிரட்டியதாகவும், சட்டை கைகளை சுருட்டி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
முன்னாள் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான சாத்வி நிரஞ்சன் ஜோதி, மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எதிராக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து மீனாட்சி லேகி, காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேரையும் சபைக்கு அழைத்து வருமாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் கூறி விட்டு சபையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார்.
சபை மீண்டும் கூடியபோது அமளி நிலவியது. பிரச்சினைக்குரிய காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபனும், டீன் குரியகோசும் சபைக்கு வரவில்லை.
அப்போது இந்த பிரச்சினையில் மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு பல்வேறு பெண் எம்.பி.க்களும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை நாள் முழுவதும் மீனாட்சி லேகி ஒத்திவைத்தார்.

Related Tags :
Next Story