வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு


வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு
x
தினத்தந்தி 8 Dec 2019 1:43 AM IST (Updated: 8 Dec 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி கோர்ட்டில் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு கோர்ட்டு, வதேரா வெளிநாடு செல்ல தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபார காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு வதேரா நேற்று டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்களுக்கு தான் ஸ்பெயினில் இருக்க வேண்டும் என அதில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த மனு தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.

Next Story