பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நாளை தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை - சோனியா காந்தி அறிவிப்பு


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: நாளை தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை -  சோனியா காந்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2019 5:35 PM IST (Updated: 8 Dec 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாளை தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கற்பழித்து எரித்துக் கொலை,  உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் கடந்த 5-ந் தேதி அந்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்தனர்.  டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளம்பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் செய்திகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி (73) நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை நிலைய நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை, மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதனால் வேதனையடைந்துள்ள சோனியா காந்தி தனது பிறந்தநாள்  கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story