தேசிய செய்திகள்

புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார் + "||" + PM Modi meets Arun Shori, who is receiving treatment at Pune Hospital

புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்

புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்
புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார்.
புனே,

முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அருண் ஷோரி மராட்டிய மாநிலம் லாவசாவில் வசித்துவருகிறார். 78 வயதாகும் அவர் கடந்த 1-ந் தேதி தனது பங்களா அருகில் நடைபயிற்சி சென்றபோது தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புனேயில் உள்ள ரூபி ஹால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளே ரத்தக்கசிவும், வீக்கமும் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6 மணிக்கு அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஷோரியை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
2. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றும் ரஷிய பிரதமர்
ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியாற்றி வருகிறார்.