தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து + "||" + Pm modi wishes sonia gandhi on his birthday

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) 73 வயது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  ”சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,  நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன்  வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

 நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? என்ற நிகழ்ச்சியில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
2. மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்: டெல்லியில் நடக்கிறது
டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.
3. 72-வது இந்திய ராணுவ தினம்: ஜனாதிபதி- பிரதமர் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து
இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
4. அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை: குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம்
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.