தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் என்கவுண்ட்டர் வழக்கு இன்று விசாரணை


தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் என்கவுண்ட்டர் வழக்கு இன்று விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2019 11:37 AM IST (Updated: 9 Dec 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணை தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

ஐதராபாத்,

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 4 பேர் கடந்த 6 ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட முகமது ஆரீப், சிவா, நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகிய நான்கு பேரும் விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்த போது என்கவுண்ட்டர் செய்து கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவி மற்றும் உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில்,  இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கொல்லப்பட்ட நான்கு பேரின்  உடற்கூராய்வு, தடயவியல் நிபுணர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவு, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.

Next Story