உத்தர பிரதேசத்தில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற கும்பல் கைது


உத்தர பிரதேசத்தில் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற கும்பல் கைது
x
தினத்தந்தி 9 Dec 2019 12:10 PM IST (Updated: 9 Dec 2019 12:10 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் போது சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் நடந்த சோதனையில், ஆள்மாறாட்டம் செய்து வேறு நபர்களுக்காக தேர்வு எழுத முயன்ற 10 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.

அந்த கும்பலின் தலைவன் உட்பட பிடிபட்ட 10 பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆதார் கார்டுகள், பான் கார்டுகள், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் 61,630 ரூபாய் பணம் முதலியவை கைப்பற்றப்பட்டன.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத அவர்கள் 50,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், போலியான ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story