சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள்: 16-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் தாக்கல் தொடர்பான நிலை தகவல் அறிக்கையை வருகிற 16-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பதவி நீட்டிப்பு கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவர் சிலை கடத்தல் தடுப்பு வழக்கு ஆவணங்களை அந்த பிரிவு உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.
அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்த பிரிவு உயர் அதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு 2-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை என்றும், பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில் ஆவணங்களை அவர் வைத்து இருப்பது சட்ட விரோதம் என்றும், எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆகியோரும், பொன் மாணிக்கவேல் தரப்பில் வக்கீல் சாய் தீபக்கும் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும், தமிழக அரசு தரப்பில் பொன் மாணிக்கவேல் துறை அதிகாரிக்கு அனுப்பிய மின்னஞ்சல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மின்னஞ்சலில் ஆவணங்களை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் 3 வாரங்கள் அவகாசம் கோரி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
அவை அனைத்தும் கிரிமினல் வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் என்பதால், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் இதுவரை தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் மீதம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய எத்தனை நாட்களாகும் என்பது குறித்த நிலைத்தகவல் அறிக்கையை கோர்ட்டுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுறுமாறு உத்தரவிட்டனர்.
அத்துடன் வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story