காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக மனுக்கள் : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக மனுக்கள்  : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2019 9:20 AM IST (Updated: 10 Dec 2019 9:20 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  ரத்து செய்தது.   இதையடுத்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து  அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று துவங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு  விசாரணை நடத்துகிறது. 


Next Story