"மேக் இன் இந்தியா" மெதுவாக "ரேப் இன் இந்தியாவாக" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
"மேக் இன் இந்தியா" மெதுவாக "ரேப் இன் இந்தியாவாக" மாறி வருகிறது என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் சம்ஷாபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் 4 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சாத்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர்கள் முகமது ஆரிப், சென்னகேசவலு, கிளனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
சம்பவம் நடந்த சத்தப்பள்ளி என்ற இடத்தில் சம்பவம் பற்றி நடித்துக்காட்டுவதற்காக குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் திடீரென போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக கூறி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் குண்டு காயம் அடைந்து பலியானார்கள்.
கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தெலுங்கானா மக்கள் பட்டாசு வெடித்தும், போலீசார் மீது பூக்களை தூவியும் வரவேற்றனர்.
இந்த விவகாரம் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவையில் இன்று பேசும் போது எல்லாவற்றையும் பற்றி விமர்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மேக் இன் இந்தியா'வில் இருந்து, இந்தியா மெதுவாக' ரேப் இன் இந்தியா நோக்கி செல்கிறது என கூறினார்.
Related Tags :
Next Story