தேசிய செய்திகள்

மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது + "||" + Man arrested for killing his wife

மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது

மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது
மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு வாரமாக ‘பிரிட்ஜ்’க்குள் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் மஜல்காவ் தாலுகா அசோக்நகரில் உள்ள ஒரு சாக்கடையில் நேற்றுமுன்தினம் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை ஆராய்ந்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஆசாமி ஒருவர் கையில் வாளி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த சாக்கடை அருகே நின்று கொண்டிருந்த காட்சி பதிவாகி இருந்தது.


அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின்போது, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தனது மனைவி ரேஷ்மா பதானை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு வீட்டில் உள்ள பிரிட்ஜ்க்குள் வைத்து இருந்ததாகவும், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தனது குழந்தைகளுடன் வந்து சாக்கடையில் உடல் பாகங்களை வீசி சென்றதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மும்பையில் தந்தையை கொன்று உடலை கூறுபோட்டு சூட்கேசில் அடைத்து வீசியதாக வளர்ப்பு மகளையும், கல்யாண் பகுதியில் மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தந்தையையும் போலீசார் கைது செய்து இருந்தனர். தற்போது பீட் அருகே நடந்த சம்பவத்தால் மராட்டியத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொடூரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டவர் கைது
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
2. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
3. தனியார் நிறுவன ஊழியர் கல்லால் தாக்கி கொலை கர்நாடக மாநிலம் மாலூரில் உடல் மீட்பு
ராயக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கர்நாடக மாநிலம் மாலூரில் மீட்கப்பட்டது.
4. தஞ்சையில், பிரபல கொள்ளையன் கைது 35 பவுன் பறிமுதல்
தஞ்சையில் கைதான பிரபல கொள்ளையனிடம் இருந்து 35 பவுனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5. கட்டிட தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்றதாக மனைவி, 2 மகன்கள், மகள் கைது
தர்மபுரியில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மதுகுடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.