தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை : மத்திய மந்திரி பதில்
தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை என்று மத்திய மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் நேற்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ரத்தன்லால் கட்டாரியா ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-
தனியார் துறைகளின் பிரதிநிதிகள் இடஒதுக்கீடு ஒரு தீர்வு ஆகாது, ஆனால் பின்தங்கியவர்கள் குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பட்டியலில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தற்போது உள்ள ஆட்கள் தேர்வு கொள்கையை விரிவுபடுத்த அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அதோடு அவர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி அளிக்கவும் தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.
துறை அளித்துள்ள தகவலின்படி தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொண்டுவரும் திட்டம் இல்லை"இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story