காவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது? அமித் ‌ஷா விளக்கம்


காவலில் வைக்கப்பட்டுள்ள கா‌‌ஷ்மீர் தலைவர்கள் விடுதலை எப்போது? அமித் ‌ஷா விளக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2019 2:02 AM GMT (Updated: 11 Dec 2019 2:02 AM GMT)

காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கடந்த 4 மாதத்திற்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கா‌‌ஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுதலை செய்யப்படுவது எப்போது என்று துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா கூறியதாவது:-

கா‌‌ஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இயல்புநிலை நிலவி வருகிறது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 99.5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். கோர்ட்டுகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்துள்ளன. 144 தடை உத்தரவோ, ஊரடங்கு உத்தரவோ அமலில் இல்லை.

காங்கிரஸ் அரசு, ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் காவலில் வைத்திருந்தது. அதுபோல், காங்கிரசின் அடிச்சுவட்டை பின்பற்ற நாங்கள் விரும்பவில்லை. தலைவர்களை தேவையின்றி காவலில் வைத்திருக்க எங்களுக்கு ஆசை இல்லை. காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை கா‌‌ஷ்மீர் நிர்வாகம் உரிய நேரத்தில் விடுவிக்கும். இதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story