மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு உயர்வு
x
தினத்தந்தி 11 Dec 2019 5:17 AM GMT (Updated: 11 Dec 2019 5:17 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு உயர்வடைந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 74.04 புள்ளிகள் உயர்வடைந்து 40,313.92 புள்ளிகளாக இருந்தது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 29.50 புள்ளிகள் உயர்ந்து 11,886.30 புள்ளிகளாக உள்ளது.

30 பங்குகளை கொண்ட சென்செக்ஸ் மதிப்பீட்டில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 0.88 சதவீதம் என்ற லாபத்துடன் முன்னிலையில் காணப்பட்டது.  இதனை தொடர்ந்து எம் அண்டு எம், ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., எல் அண்டு டி மற்றும் எச்.டி.எப்.சி. ஆகியவற்றின் நிறுவன பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

அதேவேளையில், எஸ் வங்கி 4.45 சதவீதம் என்ற அளவில் அதிக நஷ்டத்துடன் காணப்பட்டது.  எஸ்.பி.ஐ., எச்.யூ.எல்., பவர்கிரிட், ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், வேதாந்தா மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்டவற்றின் பங்குகள் 0.94 சதவீதம் அளவில் சரிவை கண்டிருந்தன.

Next Story