பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி


பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Dec 2019 3:52 PM IST (Updated: 11 Dec 2019 3:52 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், இன்று மாலை 3.25 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கைகோளான ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 576 கிலோ மீட்டர் உயரத்தில் 37 டிகிரியில் நிலை நிறுத்தப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை 628 கிலோ ஆகும்.

இது இந்தியாவின் 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இறுதிக்கட்ட பணியான 23 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ (22 மணிநேரம் 45 நிமிடம்) நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.. ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று மாலை 3.25 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.  இதன்பின்பு 15 நிமிடங்களில் ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.  இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story