டெல்லியில் பதிவான 1,965 கற்பழிப்பு வழக்குகளில் 63 சதவீதம் குழந்தைகளுக்கு எதிரானவை - தகவல்


டெல்லியில் பதிவான 1,965 கற்பழிப்பு வழக்குகளில் 63 சதவீதம்  குழந்தைகளுக்கு எதிரானவை - தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2019 12:17 PM GMT (Updated: 11 Dec 2019 12:17 PM GMT)

2018-19ல் டெல்லியில் பதிவான 1,965 கற்பழிப்பு வழக்குகளில் 63 சதவீதம் குழந்தைகளுக்கு எதிராக நடந்ததாக பிரஜா என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறி உள்ளது.

புதுடெல்லி

பிரஜா என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறி உள்ளதாவது:-

1,965 கற்பழிப்பு வழக்குகளில், 1,237 வழக்குகள் குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-19ல் டெல்லியில் பதிவான 1,965 கற்பழிப்பு வழக்குகளில் 63 சதவீதம்  குழந்தைகளுக்கு எதிராக நடந்து உள்ளது.

வெளி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கற்பழிப்பு வழக்குகள் (218), பதிவாகி உள்ளன. பாலியல் வன்கொடுமை (378) மற்றும் கடத்தல்  (863) ஆகியவையும்  பதிவாகி உள்ளன, அதே நேரத்தில் வடமேற்கு மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திருட்டு வழக்குகள் (12,875) பதிவாகியுள்ளன.

2014-15 முதல் 2018-19 வரை, பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை 6 சதவீதம்  குறைந்துள்ளது, அதே நேரத்தில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 30 சதவீதம்  குறைந்துள்ளன  என கூறப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டில் டெல்லியில் மொத்தம் 4,02,512 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 35 சதவீத  வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளன.

Next Story