தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம் + "||" + Mumbai: Four stalkers use 22-year-old man's Instagram selfie to trace his location, rape him

இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்

இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
மும்பையில் இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படத்தை பகிர்ந்த 22 வயது வாலிபருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த 8-ம் தேதி மும்பையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு சென்று அங்கு நின்று செல்பி எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தார். உடனே அவருக்கு லைக்குகள் அள்ளிச்சென்றன.  அந்த வாலிபரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் 4 வாலிபர்கள், அந்த ஓட்டல் பற்றிய விவரத்தை அறிந்து அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். 

ஓட்டலில் இளைஞரை கண்டறிந்த 4 பேரும், அவரிடம் சென்று, இன்ஸ்டாகிராமில் தங்களின் தீவிர  ரசிகர்கள் என பேச்சுக் கொடுத்துள்ளனர்.  மேலும் தங்களுடன் பைக் ரைடு வருமாறு அழைத்துள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி அந்த வாலிபர்  4 பேருடன் பைக்கில் சுற்றியுள்ளார். பின்னர், மும்பை விமான நிலையம் அருகே பைக்கை நிறுத்தி, காரில் செல்லலாம் என வற்புறுத்தியுள்ளனர். காரில் சுமார் 3 மணி நேரமாக 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

பின்பு, மறுநாள் காலை, சாலையின் ஓரமாக வாலிபரை இறக்கிவிட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர். மயக்க நிலையில் இருந்த மீண்ட வாலிபர் இது குறித்து வி.பி.நகர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்த சில மணி நேரத்தில் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது  இயற்கைக்கு மாறான உறவு வைத்ததாக 377 பிரிவின் கீழ் கைது செய்து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். 

இது குறித்து வி.பி.நகர்  போலீஸ் அதிகாரி மாதுரி போக்லே கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்படும்  அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். 

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் மும்பையில் வாலிபர் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.