குடியுரிமை மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல் செய்கிறது.
புதுடெல்லி
நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் நிறைவேறியது.
மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிராக 105 ஓட்டுகளும் கிடைத்தன. பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், மசோதா எளிதாக நிறைவேறியது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story