குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி


குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Dec 2019 10:50 AM IST (Updated: 12 Dec 2019 10:50 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நேற்று மாலை போராட்டத்தின் போது வன்முறையும் வெடித்தது. இதையடுத்து, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

வன்முறை ஏற்படாமல் தடுக்க அசாம் விரைந்த ராணுவம், இன்று காலை கொடி அணிவகுப்பு நடத்தியது. தின்சுகியா, திப்ருகர், ஜோர்ஹத் ஆகிய மாவட்டங்களில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், குடியுரிமை மசோதா குறித்து யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை  என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து  யாரும் கவலைப்பட தேவையில்லை என்று அசாம் சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்கள் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. உங்களின் உரிமைகள், தனித்துவ அடையாளம், அழகான கலாச்சாரம்  ஆகியவை தொடர்ந்து செழித்து வளரும்.  அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன் படி மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story