தேசிய செய்திகள்

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு + "||" + But people in Assam can't read your message without Internet: Congress on Modi's assurance on Citizenship Bill

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு
அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தாக்கி உள்ளது.
புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அசாம், திரிபுரா, மற்றம் மேகலயா போன்ற மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அசாம்- திரிபுராவில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் ”அசாமின்  எனது சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து அவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். - உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது. அது தொடர்ந்து செழித்து வளரும்"

"அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும்" என தனது ட்விட்டரில்  கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் அசாமில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் உங்கள் 'உறுதியளிக்கும்' செய்தியை படிக்க முடியாது, மோடிஜி . நீங்கள் மறந்து விட்டீர்கள்! அவர்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது
குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
2. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல் செய்கிறது.
3. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ; மும்பை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா
குடியுரிமை மசோதா வகுப்பு வாத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மசோதா என்று விமர்சித்துள்ள ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
4. குடியுரிமை மசோதாவை கடலில் எறியுங்கள்: இலங்கை அகதிகள் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை - மாநிலங்களவையில் வைகோ பேச்சு
இலங்கை அகதிகள் பற்றி மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றும், குடியுரிமை மசோதாவை வங்கக்கடலில் தூக்கி எறியுங்கள் என்றும் மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
5. குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.