தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி + "||" + Pak troops fire mortars from across LoC, IB; 2 civilians injured

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, கதுவா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது.  சிறிய ரக துப்பாக்கிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

நீண்ட தூரம் தாக்குதல்  நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதால்,  எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.  

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில்,  எல்லையோர கிராமங்களில் உள்ள 10 வீடுகள் லேசான சேதம் அடைந்தன. பொதுமக்கள் இருவர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார்.
2. பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
பாகிஸ்தானில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
3. பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது
பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து
பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
5. பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்
பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.