அயோத்தி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
அயோத்தி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த நிலத்தை ராம் லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஜமியத் உலமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது அஷாத் ரஷிதி கடந்த 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவர் அயோத்தி வழக்கின் பிரதான மனுதாரரான எம்.சித்திக்கின் சட்டப்பூர்வ வாரிசு ஆவார்.
இந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரி மவுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மக்பூசுர் ரகுமான், மிஷ்பகுத்தீன் ஆகிய 4 பேரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அயோத்தி வழக்கில் இதுவரை தாக்கல் செய்து இருந்த 18 சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.
Related Tags :
Next Story