நாட்டின் நலனுக்காக சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் தவிர்த்தது - பிரதமர் மோடி


நாட்டின் நலனுக்காக சில முடிவுகளை எடுப்பதை  காங்கிரஸ் தவிர்த்தது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 12 Dec 2019 1:47 PM GMT (Updated: 12 Dec 2019 1:47 PM GMT)

நாட்டின் நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி தவிர்த்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,

நாட்டு நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி எப்போதும் தவிர்த்தது. நீண்டக்கால பிரச்சினையான அயோத்திக்கு அமைதியான முறையில் தீர்வுக்காணப்பட்டுள்ளது. 

வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் தான் ஜார்க்கண்டை உருவாக்கியது. வாக்கு வங்கி அரசியலைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. எப்போதும் மக்கள் நலனுக்காக உழைப்பதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளதாகவும் பிரதமர்  மோடி சாடியுள்ளார்.

Next Story