குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாமில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: அசாமில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:23 PM IST (Updated: 12 Dec 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கவுகாத்தி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாரும், ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவுகாத்தி–ஷில்லாங் சாலையில் கடைகளை, கட்டிடங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். பாதுகாப்பு படையினருடன் மோதினர். இதனால் அங்கும் துப்பாக்கி சூடு நடந்தது. பலர் காயம் அடைந்தனர்.

ரங்கியா டவுனில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

கோலாகாட் மாவட்டத்தில் வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். இன்று  நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மட்டும் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story