இங்கிலாந்து தேர்தலில் வெற்றி; போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இங்கிலாந்து தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா - இங்கிலாந்து இடையேயான நெருக்கமான உறவுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story