பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடியது. நடப்பு கூட்டத்தொடரில், குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் கடைசி நாளான இன்று, ராகுல் காந்தி கூறிய கருத்தால் கடும் அமளி ஏற்பட்டது.
ரேப் இன் இந்தியா என்று ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு, மன்னிப்பு கேட்க கோரி பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எங்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி கோஷம் இட்டனர். ராகுல்காந்தி பதிலளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் கடைசி நாளான இன்று அவை கூடியதில் இருந்தே கடும் அமளி நிலவியது. இதையடுத்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதேபோல், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
Related Tags :
Next Story