மேகாலயாவில் போராட்டம்: அமித்ஷாவின் பயணம் ரத்து
மேகாலயாவில் போராட்டம் நடந்து வருவதையடுத்து அமித்ஷாவின் ஷில்லாங் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் ஞாயிற்றுகிழமை அன்று மேகாலயா மாநிலத்தில் உள்ள வடகிழக்கு காவல்துறை அகாடமிக்கு செல்ல இருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் மேலும் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story