தேசிய செய்திகள்

திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் தற்கொலை + "||" + Devotee commits suicide in Tirupati temple

திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் தற்கொலை

திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் தற்கொலை
திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருமலை,

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அபிசேகத்திற்காக திருப்பதியில் இருந்து ஒரு மினிலாரியில் பால் கேன்கள் நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும், காலி பால்கேன்களை ஏற்றிக்கொண்டு அந்த லாரி மேற்கு மாடவீதி வழியாக சென்றபோது பக்தர் ஒருவர் திடீரென மினிலாரியின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.


இறந்தவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பக்தர் தற்கொலை செய்து கொண்டதால், ஏழுமலையான் கோவில் தரிசனம் ஒரு சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. புனிதநீரால் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் சாமி தரிசனம் தொடங்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி கோவிலில் 11-ந் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி: இ-பாஸ் கட்டாயம்; மொட்டை போட முடியாது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மொட்டை போட முடியாது.

ஆசிரியரின் தேர்வுகள்...