டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்


டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
x
தினத்தந்தி 14 Dec 2019 6:53 AM GMT (Updated: 14 Dec 2019 6:53 AM GMT)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார்.

புதுடெல்லி

பிரசாந்த் கிஷோர் இந்திய அளவில் பிரபலமான அரசியல் ஆலோசகர் ஆவார். இவர் சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ் என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வந்தார். அதில் தான் சுனிலும் அங்கம் வகித்தார்.

பிறகு இருவருக்கும் இடையே உருவான கருத்து வேறுபாட்டால், பிரசாந்த் கிஷோர் இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். நரேந்திரமோடி பிரதமர் ஆவதற்கும், நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரி ஆவதற்கும், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்-மந்திரி ஆவதற்கும் பிரசாந்த் கிஷோர் வழங்கிய தேர்தல் ஆலோசனை பிரதான காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் ஆட்சியை தக்கவைப்பதில் பாரதீய ஜனதாவுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்பதால், ஆம் ஆத்மி கட்சி பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி உள்ளது.  2014 ஆம் ஆண்டு முதல் பல தேர்தல் வெற்றி வியூகங்களை சாதித்து காட்டியவர் பிரசாந்த் கிஷோர் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story