நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சி போராடும்; சோனியா காந்தி பேச்சு


நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சி போராடும்; சோனியா காந்தி பேச்சு
x

நாடு மற்றும் அதன் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்காக கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சி போராடும் என சோனியா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 'நாட்டை காப்போம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று இன்று நடந்தது.  இதில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, நாட்டில் குழம்பிய தலைவர், குழப்ப நிலை என்ற சூழல் காணப்படுகிறது.

அனைவருக்கும் வளர்ச்சி என்பது எங்கே இருக்கிறது என நாடு முழுவதும் கேட்கப்படுகிறது.

இந்தியாவின் ஆன்மாவை கிழித்த, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டு மக்கள் போராடுவார்கள் என அவர் உறுதிபட கூறினார்.

அவர் தொடர்ந்து பேசும்பொழுது, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றை காப்பதற்காக எழுச்சி பெற வேண்டிய தருணமிது.  அநீதி மிக பெரிய குற்றம்.

அநீதிக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.  காங்கிரஸ் கட்சி தனது காலடியை பின்னோக்கி வைக்காது, கடைசி மூச்சு உள்ளவரை போராடி நாடும், அதன் ஜனநாயகமும் காப்பாற்றப்படுவதற்கான கடமையை நிறைவேற்றும்.

நாட்டை காப்பதற்கான நேரம் வந்து விட்டது.  அதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும்.

நாடாளுமன்றம் பற்றியோ அல்லது அமைப்புகளை பற்றியோ மோடி மற்றும் அமித் ஷாவின் அரசாங்கம் கண்டு கொள்வதே இல்லை.  உண்மையான விசயங்களை மறைத்து விட்டு, மக்களை சண்டை போட செய்வதே அவர்களின் ஒரே திட்டம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் அரசியல் சாசன விதிமீறலில் ஈடுபடும் அவர்களே அரசியல் சாசன தினமும் கொண்டாடுகின்றனர் என பேசியுள்ளார்.

Next Story